ஐஸ்கிரீம் கேக்கை அதிக விலைக்கு விற்றதாக வழக்கு - ரூ.7000 இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!
02:30 PM Apr 13, 2025 IST
|
Ramamoorthy S
ஐஸ்கிரீம் கேக்கை அதிக விலைக்கு விற்றதாக வழக்கு தொடர்ந்த வாடிக்கையாளருக்கு, 7 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஃபெரோஸ்கான் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், பிரபல ஐஸ்கிரிம் நிறுவனம், 300 ரூபாய் கொண்ட ஐஸ்கிரீம் கேக்கை தன்னிடம் ஆயிரத்து 182 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெரோஸ்கானுக்கு 7 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement