செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து - ஒருவர் பலி!

08:00 AM Mar 31, 2025 IST | Ramamoorthy S

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பெங்களூரு-காமாக்யா அதிவேக விரைவு ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

Advertisement

பெங்களூரிலிருந்து காமக்யா நோக்கிச் சென்ற அதிவேக விரைவு ரயில் மகாநதி பாலத்தைக் கடந்த போது திடீரென தடம்பிரண்டது. ரயிலின் 11 ஏசி பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து இறங்கியதில் 8 பயணிகள் காயமடைந்தனர்.

இதில், ஒருவர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.  ரயில் தடம்புரண்டதில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கட்டாக் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

சம்பவத்தின் போது ரயில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Tags :
Bengaluru-Kamakhya express derailedCuttackCuttack government hospitalFEATUREDMahanadi bridgeMAINodisha
Advertisement
Next Article