ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு நிரந்தர அரசு வேலை! : பிரதமர் மோடி
பாஜக அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளை வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Advertisement
மத்திய அரசு பணிகளுக்குத் தேர்வான 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா, நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு, பணியாணைகளை வழங்கினார்.
அப்போது பேசிய பிரதமர்,
மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என கூறினார்.
நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஆள்சேர்ப்பு செயல்முறை நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பணியமர்த்தப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் பெண்களே என கூறிய அவர், பெண்கள் அனைத்துத்துறைகளிலும் சுயச்சார்புகளாக மாறுவதே தனது அரசின்
முயற்சி எனவும் கூறினார்.
மேலும், பெண்களுக்கு 26 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கும் அரசின் முடிவு, அவர்களின் தொழில் வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியுள்ளது என கூறினார்.