ஒன்றரை வயதுக் குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை!
11:09 AM Mar 17, 2025 IST
|
Murugesan M
ஈரோடு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் தனது ஒன்றரை வயதுக் குழந்தையை கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
Advertisement
மொடக்குறிச்சி அருகேயுள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஆண்,பெண் என இரட்டை குழந்தைகள் உள்ள நிலையில், மனைவியின் நடத்தையில் குமார் சந்தேகமடைந்துள்ளார்.
இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், கணவரிடம் பெண் குழந்தையை விட்டு விட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
Advertisement
பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது குழந்தை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாகக் கூறியுள்ளார். இதனையறிந்து அங்குச் சென்ற காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் குழந்தையை கொன்று விட்டு நாடகமாடிய தந்தையை கைது செய்தனர்.
Advertisement