செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஒரிஜினல் அருள்மொழி வர்மன் - கிளிகளின் காதலன் PARROT சுதர்சன் - சிறப்பு தொகுப்பு!

08:00 AM Nov 09, 2024 IST | Murugesan M

மெய்யழகன் திரைப்படத்தில் வரும் அரவிந்த்சாமிபோல், சென்னையில் ஒருவர் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வருகிறார். அவர் குறித்த சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.

Advertisement

மெய்யழகன் திரைப்படத்தில் அரவிந்த்சாமி ஏற்று நடித்த அருள்மொழி வர்மன் கதாபாத்திரம் கிளிகளுக்கு உணவளிக்கும் காட்சி இது. இந்த காட்சி சென்னையை சேர்ந்த நிஜ அருள்மொழி வர்மனின் பாதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அவரது பெயர், பேரட் சுதர்சன்

பேரட் சுதர்சனின் வீட்டில்தான், மெய்யழகன் படத்தில் வரும் அந்த பறவை காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த தகவலும், இது தொடர்பாக படப்பிடிப்பு காட்சிகளும் வெளியானதில் இருந்து, பேரட் சுதர்சனை காண தினமும் நூற்றுக்கணக்கானோர் அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர்.

Advertisement

தனக்காகவும், தனது குடும்பத்திற்காகவும் மட்டுமே இயந்திரமாக சுற்றி சுழன்றுகொண்டிருக்கும் மக்கள் மத்தியில், பறவைகளுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் பேரட் சுதர்சன். சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த 51 வயதான இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிளிகளுக்கு உணவளித்து வருகிறார்.

தினமும் காலை சரியாக 6 மணிக்கும், மாலை 4 மணிக்கும் ஆயிரக்கணக்கான கிளிகள் சுதர்சனனின் வீட்டு மாடியில் ஆஜராகிவிடும். குயில்கள், காகங்கள், புறாக்கள், அணில்கள், சிட்டுக்குருவிகள் உள்ளிட்டவையும் வந்து காத்திருக்க தொடங்கிவிடும். அவற்றிக்கு, ஊறவைத்த அரிசி , வேர்கடலை, மாங்காய், கொய்யா உள்ளிட்டவற்றை சுதர்சன் உணவாக அளிப்பார்.

சுதர்ஷன் ஆண்டுகணக்கில் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளிப்பதை தினமும் பலர் வந்து கண்டு செல்கின்றனர். பறவைகள் மீதான சுதர்சனனின் அன்பு பிரமிக்க வைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடக்கத்திலேயே கூறியதுபோல், தனக்காக மட்டுமே சிந்திக்கும் மக்களுக்கு மத்தியில், சக ஜீவராசிகளுக்காகவும் சிந்திக்கும் சுதர்சனன் போன்றவர்கள், உலகிற்கான முன்மாதிரி மனிதர்களாக திகழ்கின்றனர்.

 

Advertisement
Tags :
FEATUREDMAINArvindsamyMeiyazhaganfeeds thousands of parrots every dayArulmozhi Varmanparrot Sudarsan
Advertisement
Next Article