ஒரு வாரமாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!
05:15 PM Dec 17, 2024 IST | Murugesan M
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகமரை கீழ்க்காலனியில் , சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
Advertisement
இந்நிலையில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி, நாகமரை சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement