ஒரே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு!
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து 6 மணி நேரமாக அதே இடத்தில் நீடிப்பதால் ஃபெங்கல் புயல் உருவாவதில் மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவுக்குள் புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில், தொடர்ந்து 6 மணி நேரமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நீடித்து வரும் நிலையில், புயல் உருவாவதில் மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்தப் புயல் நவம்பர் 30-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடக்கும் எனவும்,
குறிப்பாக காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை வாபஸ் பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.