ஒரே நாடு, ஒரே தேர்தல் ஏன் வேண்டும்? - மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் விளக்கம்!
11:55 AM Dec 19, 2024 IST | Murugesan M
அம்பேத்கரின் புகழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
Advertisement
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்பேத்கரின் புகழை குறைக்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை மக்களின் நலனிலும், முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்தும் என கூறினார். சமூகத்தில் உள்ள அத்தனை கட்டுப்பாடுகளும் சீர்குலைய வேண்டும் என சீமான் நினைப்பதாக குற்றம்சாட்டினார்.
Advertisement
Advertisement