செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆக்கபூர்வமான விவாதம் - பிரதமர் மோடி

10:05 AM Jan 28, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் 40 லட்சம் கோடி ரூபாய் முத்ரா கடன் வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

குடியரசு தினத்தையொட்டி டெல்லி கரீயப்பா அணிவகுப்பு மைதானத்தில் என்சிசி மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து என்சிசி மாணவர்கள் தரப்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் என்சிசி மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களது மாநிலம் சார்ந்த பாரம்பரிய நடனங்களை ஆடியது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

Advertisement

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டில் 14 லட்சமாக இருந்த என்சிசி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 20 லட்சமாக அதிகரித்திருப்பதாகவும், அதில் 8 லட்சம் பேர் பெண்கள் என்றும் பெருமிதம் தெரிவித்தார். அத்துடன், உலகின் மிகப்பெரிய இளையோர் அமைப்பு என்சிசி என்றும் தெரிவித்தார்.

பின்னர், மத்திய அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தொடர்பாக ஆக்கபூர்வமாக விவாதம் நடைபெற வேண்டும் என்றும், அப்போதுதான் தேசம் சரியான பாதையில் நடைபோடும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதேபோல மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் 40 லட்சம் கோடி ரூபாய் முத்ரா கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

 

Advertisement
Tags :
40 lakh crore rupees of Mudra loansDelhi's Cariappa Parade Ground.FEATUREDMAINMudra loansNCC studentsprime minister modi
Advertisement