செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் - ஸ்டாலினுக்கு கருணாநிதி அறிவுறுத்துவது போல் பாஜக பதிவு!

01:14 PM Dec 13, 2024 IST | Murugesan M

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்ப்பதாக நினைத்து, மாட்டிக் கொள்ளாதே என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, கருணாநிதி அறிவுறுத்துவது போன்ற பதிவை தமிழக பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Advertisement

அந்த பதிவில் உடன் பிறப்புகளின் கண்களில் மண்ணை தூவுவதில் தம்மை விட ஸ்டாலின் வேகமாக செயல்படுவதாக கருணாநிதி பாராட்டுவது போலவும், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை, தாம் ஏற்கனவே ஆதரித்துவிட்டதால், அதைப் பற்றி அதிகமாக பேசி மாட்டிக்கொள்ள வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலினை எச்சரிப்பது போலவும் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக சற்று அடக்கி வாசிக்கும்படியும், இவ்விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என கருணாநிதி அறிவுறுத்துவது போன்று நகைச்சுவையாக பதிவிடப்பட்டுள்ளது.

Advertisement

இறுதியாக, தமது குடும்பம் மட்டும் ஆளட்டும் எனக்கூறி கருணாநிதி கடிதத்தை முடிப்பது போலவும் கிண்டல் செய்யப்பட்டுள்ளது.

 

Advertisement
Tags :
bjpDMKFEATUREDkarunanithiMAINone nation one electionstalin
Advertisement
Next Article