செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஒரே நாளில் ஒரு ட்ரில்லியன் காலி : அமெரிக்காவை அதிர வைத்த DeepSeek AI பின்னணி யார்?

07:08 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சீனாவின் DeepSeek AI அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் செமிகண்டக்டர் துறையில் மட்டும் ஒரே நாளில் சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலாக, இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அறிமுகப்படுத்திய ஏழே நாட்களில், ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கங்களில் OpenAI யை பின்னுக்குத் தள்ளி, DeepSeek AI முதலிடத்தைப் பிடித்துள்ளது. DeepSeek பின்னால் இருப்பது யார் ? அவரின் பின்னணி என்ன ? AI ChatGPT யை உருவாக்கியது எப்படி ? என்பது பற்றி பார்ப்போம்.

Advertisement

AI என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம், எல்லாத் துறைகளிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. மக்களின் அன்றாட தேவைகளிலும், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சமீப காலமாக, AI ChatGPT வேகமாக வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த தேடுபொறிகள், கேட்கப்படும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளிக்கும். கூகுள் போல் அல்காரிதம் அடிப்படையில் இல்லாமல், குறிப்பிட்ட எல்லை வரை சுயமாக சிந்தித்தும் பதில்களை வழங்கும். AI தொழில்நுட்பத்தின் புதிய உச்சமாக இந்த ChatGPT அமைந்துள்ளது. இந்த AI ChatGPT தொழில் நுட்பத் துறையில், OpenAI ChatGPT, google gemini என அமெரிக்க நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

Advertisement

இந்த சூழலில் தான், கடந்த திங்கள் கிழமை, சீனாவின் DeepSeek நிறுவனம் AI ChatGPT யை அறிமுகப் படுத்தியது. அறிமுகமான ஒரே வாரத்தில், Apple, App Store மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனை படைத்துள்ளது.

DeepSeek சந்தைக்கு வந்த சில நாட்களிலேயே உலக செமிகண்டக்டர் சிப் துறையே பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. உலகின் முதல் 10 செமிகண்டக்டர் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 1 டிரில்லியன் டாலருக்கும் மேல் இழப்பைச் சந்தித்துள்ளன. குறிப்பாக என்விடியா பங்குகள் 13 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளன.

உலக AI ChatGPT துறையை நொடியில் அதிரவைத்த DeepSeekக்குப் பின்னால் இருப்பவர் சீனாவின் Liang Wengfeng லியாங் வென்ஃபெங். சீனாவின் சாம் ஆல்ட்மேன் என்றும் அழைக்கப்படும் இவர் AI தொழில்துறையில் ஒரு இருண்ட குதிரையாக உருவெடுத்துள்ளார்.

40 வயதான Liang Wengfeng லியாங் வென்ஃபெங், 2015 ஆம் ஆண்டு, தனது கல்லூரி நண்பர்களுடன் AI-ஐ மையப்படுத்திய ஹெட்ஜ் நிதியான High-Flyer நிறுவனத்தைத் தொடங்கினார்.

பிறகு, 2023 ஆம் ஆண்டு, செயற்கை பொது நுண்ணறிவு, மனித நுண்ணறிவுடன் பொருந்தக்கூடிய வகையில் AI யை உருவாக்கும் நோக்கத்தில் DeepSeek நிறுவனத்தைத் தொடங்கினார் லியாங்.

DeepSeek இன் R1 மாடல் அதன் AI ChatGPT உருவாக்க அமெரிக்க நிறுவனங்கள் செய்த மொத்த செலவில் ஒரு பங்கிலேயே, லியாங் DeepSeek AI யை உருவாக்கியுள்ளார்.

அதிநவீன AI க்கு மிகப் பெரிய முதலீடும், உள்கட்டமைப்பும் தேவை என்ற நிலையை DeepSeek தலைகீழாக மாற்றியுள்ளது. DeepSeek AI யை உருவாக்க 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே செலவாகியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

பல லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் GOOGLE, META , X போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் OpenAI யும் பல ஆண்டுகளாக மேற்கொண்ட AI முயற்சியினை வெறும் இரண்டு ஆண்டுகளில் தகர்த்துள்ளது DeepSeek .

OpenAI மற்றும் GOOGLE போன்ற நிறுவனங்கள் 100 CHIP களைக் கொண்டு AI யை உருவாக்கினால், சீனாவின் DeepSeek வெறும் 50 CHIP களை வைத்து, மிகவும் சக்தி வாய்ந்த அதிநவீன AI மாடல்களை உருவாக்கியுள்ளது. சொல்லப்போனால், அதிகமான Hardware கட்டமைப்பு இல்லாமல், எளிய கட்டமைப்பில் இயங்க கூடிய வகையில் இந்த DeepSeek AI உருவாக்கப்பட்டு உள்ளது. அதாவது, குறைவான கம்ப்யூட்டிங் ஆற்றலைப் பயன்படுத்தி சக்திவாய்ந்த AI மாடல்களை உருவாக்க முடியும் என்பதை DeepSeek நிரூபித்துள்ளது.

இதனால், இனி வரும் காலத்தில் SEMICONDUCTOR CHIP களின் தேவை AI துறையில் குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வாரம், OpenAI மற்றும் பிற நிறுவனங்கள் அமெரிக்காவில் AI உள்கட்டமைப்பை உருவாக்க 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உறுதியளித்தன. இதனை " வரலாற்றில் மிகப்பெரிய AI முதலீடு " என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டினார்.

இந்நிலையில், அமெரிக்காவின் எல்லா துறைகளையும் DeepSeek ஆட்டம் காண வைத்துள்ளது. ஒரே அடியில் அமெரிக்க AI உலகையே நிலைகுலைய வைத்திருக்கிறது.

எப்போதுமே யார் அதிகம் செலவழிக்கிறார்கள் என்பதல்ல புதுமை. யார் புத்திசாலியாக செயல்படுகிறார்கள் என்பதே புதுமையாகும். DeepSeek இதை உறுதி படுத்தி உள்ளது.

Advertisement
Tags :
FEATUREDMAINchatgptchinaWho is behind the DeepSeek AI that shook America?One trillion calls in one dayDeepSeek AI that shook America
Advertisement