ஒளிவட்ட பாதையை நிறைவு செய்தது ஆதித்யா எல்1!
11:32 AM Jul 03, 2024 IST
|
Murugesan M
சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் திட்டமிட்டபடி ஒளிவட்ட பாதையை நிறைவு செய்தது.
Advertisement
கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது.
இந்த விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் துாரம் 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள எல் 1 எனப்படும் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
Advertisement
அதன்படி இந்தாண்டு ஜனவரியில் எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடைந்தது. கடந்த மே மாதம் சூரிய வெடிப்பை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது.
இந்நிலையில் இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ஆதித்யா எல்.1 விண்கலம் 178 நாட்கள் பயணித்து லாக்ராஞ்சியன் புள்ளி -1ல் தனது ஒளி வட்ட பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
Advertisement
Next Article