செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஓசூரில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு - படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

06:12 PM Nov 20, 2024 IST | Murugesan M

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் சத்யநாராயணன் என்பவரிடம் , 30 வயதான கண்ணன் என்பவர் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இவர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வரும் போது, மற்றொரு வழக்கறிஞரின் உதவியாளர் ஆனந்தன் என்பவர், கண்ணனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

Advertisement

இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வழக்கறிஞர் கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டப்பகலில் இந்த சம்பவத்தை அரங்கேற்றிய ஆனந்தன் JM 2 நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Advertisement
Tags :
AnandanHosurJM 2 court.Kannan lawyerlawyer attackedMAIN
Advertisement
Next Article