ஓசூர் அருகே ரசாயனம் கலந்த 6 டன் தர்பூசணி பழங்கள் பறிமுதல்!
07:18 PM Mar 20, 2025 IST
|
Murugesan M
ஓசூர் அருகே ரசாயனம் கலந்த 6 டன் தர்பூசணி பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
Advertisement
கோடைக் காலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தர்பூசணி பழங்கள் விற்பனை களைகட்டியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில இடங்களில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்களில் அதிக சிவப்பு நிறத்திற்காக ரசாயன ஊசி செலுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் அடிப்படையில் தேன்கனிக்கோட்டை பகுதியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், 6 இடங்களில் விற்பனை செய்யப்பட்ட பழங்களில் ரசாயனம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 6 டன் தர்பூசணி பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
Advertisement
Advertisement