செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த பல்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து!

12:19 PM Mar 26, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

துறையூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பல்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள நாகலாபுரம் பகுதியை சேர்ந்த செந்தில் வடிவு என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கடைவீதிக்கு சென்றுள்ளார்.

அதே நேரத்தில், அரியலூரில் இருந்து கேரளா செல்லும் சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற பல்கர் லாரி நாகலாபுரம் வழியாக வந்துள்ளது.

Advertisement

நாகலாபுரம் பகுதியில் உள்ள  பேரிக்கார்டை கடக்க முயலும்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த லாரி, செந்தில் வடிவு சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், விபத்தில் காயமடைந்த செந்தில் வடிவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

Advertisement
Tags :
causing an accident!lorry accidentMAINThe driver lost control of the Bulgar lorry and it overturned on the road
Advertisement