ஓபிஎஸ்க்கு சிக்கல்! சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப்பெற அனுமதித்த உத்தரவு ரத்து!
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப்பெற அனுமதித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
2001-2006ம் ஆண்டில் வருவாய் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டு, சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், அந்த வழக்கு திரும்ப பெறப்பட்டது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்வது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
மேலும், ஓபிஎஸ் உள்ளிட்டோரை விடுவித்த சிவகங்கை நீதிமன்றத்தின் உத்தரவையும்
அவர் ரத்து செய்துள்ளார்.
நவம்பர் 27ஆம் தேதிக்குள் வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என சிவகங்கை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,
வழக்கை இழுத்தடிக்க முயற்சித்தால், சம்பந்தப்பட்டவர்களின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். தினமும் வழக்கு விசாரணையை நடத்தி, 2025ஆம் ஆண்டு ஜூன் 31ஆம் தேதிக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.