செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் கொலை : 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!

12:56 PM Mar 19, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

Advertisement

நெல்லை தடிவீரன் கோயில் தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசைன், அப்பகுதியில் உள்ள மசூதியில் முத்தவல்லியாக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்த ஜாகிர் உசைனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு மாவட்ட காவல் துணை ஆணையர் கீதா தலைமையிலான போலீசார், ஜாகிர் உசேனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும் ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறி ஜாகிர் உசேன்பதிவு செய்துள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தொடர்புடைய கார்த்திக் மற்றும் அக்பர் பாஷா ஆகிய இருவர் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Advertisement
Tags :
MAINRetired police officer Zakir Hussain murder: 2 surrender in court!நெல்லை
Advertisement