ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் : சரணடைந்த இரண்டு பேரிடம் காவல்துறை விசாரணை!
12:32 PM Mar 22, 2025 IST
|
Murugesan M
நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த இரண்டு பேரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
நெல்லை நகரத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி கடந்த 18-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக கார்த்திக், அக்பர் ஷா ஆகிய 2 பேர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தொடர்ந்து அவர்களை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டுமென காவல்துறை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
Advertisement
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணைக்காக இரண்டு நாள் காவல்துறை காவல் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து இருவரிடமும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement