செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

'கங்குவா' திரைப்படத்தை வெளியிட தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

07:15 PM Nov 08, 2024 IST | Murugesan M

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகை முழுமையாக செலுத்தப்பட்டதால் கங்குவா திரைபடத்தை வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தனது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், பட தயாரிப்பு பணிக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 99 கோடியே 22 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.

இதில் 45 கோடி ரூபாயை திருப்பி செலுத்திய ஞானவேல் ராஜா, மீதமுள்ள 55 கோடி ரூபாயை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisement

அதில் தொகையை திருப்பித் தராமல் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 55 கோடி ரூபாயில் 18 கோடி ரூபாயை ஏற்கனவே செலுத்தி விட்டதாகவும், மீதமுள்ள பாக்கி தொகை அனைத்தும் இன்று முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி கங்குவா படத்தை வெளியிட தடையில்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

 

Advertisement
Tags :
MAINReliancechennia high courtsuriyakanguva releaseyanavel raja
Advertisement
Next Article