கங்குவா படத்தை வெளியிடக்கூடாது! : சென்னை உயர்நீதிமன்றம்
20 கோடி ரூபாயை சொத்தாட்சியரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
2013ம் ஆண்டு அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரின் நிறுவனத்தின் பங்குதாரர்களான ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர்.
இந்த தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்த உத்தரவிடக்கோரி
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சொத்தாட்சியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, தொகையை வழங்க பணம் இல்லை என கூறும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ரிலையன்ஸ் தொடர்ந்த வழக்கில் மட்டும் 100 கோடி ரூபாயை செலுத்தி உள்ளதாக சொத்தாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 20 கோடி ரூபாயை நவம்பர் 13ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பணத்தை செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டனர்.