For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கங்கை நதி தூய்மை குறித்து தவறான தகவல் - உ.பி.முதல்வர் கண்டனம்!

05:55 PM Jan 10, 2025 IST | Murugesan M
கங்கை நதி தூய்மை குறித்து தவறான தகவல்   உ பி முதல்வர் கண்டனம்

கங்கை நதியின் தூய்மை குறித்து தவறான தகவல்களை பரப்பிய எதிர்க்கட்சிகளை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள யோகி ஆதித்யநாத், கடந்த 2013-ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்தபோது கும்பமேளாவில் பங்கேற்க வந்த மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத் கங்கையின் அசுத்தத்தைக் கண்டு நீராடாமல் திரும்பிச் சென்றதாக விமர்சித்தார்.

Advertisement

ஆனால், கடந்த 2019-ல் பாஜக ஆட்சியில் கும்பமேளாவுக்கு சென்ற மொரிஷியஸ் பிரதமர் தன்னையே தடுக்க முடியாமல் ஆற்றில் நீராடினார் எனவும் தெரிவித்தார். மேலும், பலமுறை கங்கையில் நீராடி அதனை அருந்தியபோதும் தான் நோய்வாய்ப்படவில்லை எனவும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement