கச்சத்தீவை மீட்க வலியுறுத்தல் - தமிழக சட்டப்பேரவயில் தனித்தீர்மானம்!
12:39 PM Apr 02, 2025 IST
|
Ramamoorthy S
கச்சத்தீவை மீட்க கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
Advertisement
அப்போது பேசிய அவர், கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும், இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழக மீனவர்களின் நிலை மாறவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், கச்சத்தீவு ஒப்பந்தத்தில் திருத்தம் தேவை என முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீர்மானம் நிறைவேற்றியதை குறிப்பிட்ட அவர், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை பிரதமர் மோடி மீட்டு அழைத்து வரவேண்டும் என வலியுறுத்தினார்.
Advertisement
Advertisement