செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது!

02:34 PM Nov 12, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விற்பனை செய்ய தாய்லாந்தில் இருந்து விலை உயர்ந்த கஞ்சாவை கடத்தி வந்த இருவரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த கஞ்சா கடத்தி வரப்பட்டு, சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றத்தடுப்பு பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் சென்னை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், தாய்லாந்தில் இருந்து கஞ்சா கடத்திவந்த இருவரை கைது செய்தனர்.

Advertisement

கைதான ஃபாருக், முகமது யூசுப் ஆகியோரிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், சினிமா துறையினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விற்பனை செய்ய கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Tags :
2 arrested for smuggling cannabis!MAIN
Advertisement