கடந்த ஆண்டு வருமான வரித்துறையின் வசூல் எவ்வளவு தெரியுமா?!
10:51 AM Nov 09, 2024 IST
|
Murugesan M
தேசிய அளவில் வருமான வரி வசூல் இலக்கு 22 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் என்று வருமான வரி துறை முதன்மை ஆணையர் வசந்தன் தெரிவித்துள்ளார்.
Advertisement
கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு உட்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர்களுக்கு வருமான வரித்துறை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய வசந்தன், தேசிய அளவில் கடந்த ஆண்டு வருமான வரித்துறையின் வசூல் 19 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததாகவும், அதனை இந்த வருடம் 22 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். தமிழகத்தின் பங்கு ஒரு லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் எனவும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
Next Article