கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
Advertisement
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன் அளவு மாநில உற்பத்தி மதிப்பில் 25 சதவீதமாகவே இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சியில் இந்த கடன் சதவிகிதம் மாநில உற்பத்தியில் 26 சதவீதத்தை கடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை என விமர்சித்துள்ளார்.
வருவாய் பற்றாக்குறை, கடன் அளவு என எல்லா நிதிக் குறியீடுகளிலும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,
கடன் அளவு பற்றி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்றும், நிதி மேலாண்மையில் மட்டுமே அவர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.