கடலில் விழுந்து மாயமான மீனவரை மீட்டுத்தர கோரிக்கை!
02:40 PM Nov 25, 2024 IST
|
Murugesan M
கடலில் விழுந்து மாயமான விளாத்திகுளம் மீனவரை மீட்டுத் தர வேண்டுமென தாய் மற்றும் மனைவி கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த அண்ணாதுரை, கடந்த 22-ஆம் தேதி கொச்சின் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக கடலில் தவறி விழுந்தார்.
தகவலறிந்த அவரது மனைவி மற்றும் தாய், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று அண்ணாதுரையை மீட்டுத் தரவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
Advertisement
ஆனால் 3 நாட்களாகியும் அண்ணாதுரை மீட்கப்படாததால் வேதனையடைந்த குடும்பத்தினர், அண்ணாதுரையை மீட்டுதர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Next Article