கடலூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதிய அரசுப்பேருந்து - 20 பேர் காயம்!
10:26 AM Apr 10, 2025 IST
|
Ramamoorthy S
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
Advertisement
கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கம் அருகே விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதே சாலையில், முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென பிரேக் பிடித்துள்ளது.
அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இரு பேருந்துகளில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
Advertisement
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement