செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கடலூர் அருகே லாரி ஓட்டுநர்களை குறிவைத்து அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபடும் கும்பலால் பரபரப்பு!

01:52 PM Apr 02, 2025 IST | Murugesan M

கடலூர் அருகே லாரி ஓட்டுநர்களைத் தாக்கி மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

புதுச்சேரி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வரும் நிலையில், எம்.புதூர் பகுதியில் வாகனங்களை மறித்து மர்மகும்பல் வழிப்பறியில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், புதுச்சேரியிலிருந்து மயிலாடுதுறைக்குச் சென்ற லாரியை வழிமறித்து, ஓட்டுநர் காளிமுத்துவை அரிவாளால் தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு மர்மநபர்கள் தப்பியோடியுள்ளனர்.

Advertisement

இதேபோல் மற்றொரு லாரி ஓட்டுநரான மணிமாறன் என்பவரையும் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் மது மற்றும் கஞ்சா போதையில் வழிபறியில் ஈடுபடும் இளைஞர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
MAINThere is a stir near Cuddalore as a gang targets truck drivers and engages in robbery by slashing them with sickles!கடலூர்வழிப்பறியில் ஈடுபடும் கும்பல்
Advertisement
Next Article