கடலூர் மாவட்டத்தில் தொடரும் மழை - சாய்ந்து விழுந்த மின் கம்பங்கள்!
11:10 AM Dec 01, 2024 IST | Murugesan M
கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சரிந்து விழுந்து சேதமடைந்தன.
தென்மேற்கு வங்ககடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் காரணமாக கடலூரில் நேற்று முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
Advertisement
புயல் கரையை கடந்த நிலையிலும், பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் =மழை பெய்து வருவதால் ஆங்காங்கே, மின் கம்பங்கள் சரிந்து விழுந்து சேதமடைந்தன. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement