கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே மீன் குழம்பில் விஷம் வைத்து கணவனை கொன்ற மனைவி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கட்டியங்குப்பம் பகுதியை சேர்ந்த கோபால கண்ணன், கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து சொந்த ஊருக்கு திரும்பிய அவர், கடந்த 4 மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மனைவி விஜயாவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கோபால கண்ணன், அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜயா, மீன் குழம்பில் விஷம் வைத்து கணவனை கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விஜயா மற்றும அவருக்கு உதவியாக செயல்பட்ட தேவநாதம் உள்பட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.