கடலூர் : வாகனங்களை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்!
05:33 PM Apr 01, 2025 IST
|
Murugesan M
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கஞ்சா போதையில் சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
பண்ருட்டியில் இருந்து கடலூர் செல்லும் பட்டாம்பாக்கம் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கஞ்சா போதையில் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டனர்.
மேலும், வாகன ஓட்டிகளை தாக்கவும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், பட்டாம்பாக்கம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தித் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Advertisement