கடல் அரிப்பு: திருச்செந்தூர் கோயிலில் இந்து முன்னணியினர் கற்பூரம் ஏற்றி வழிபாடு!
11:38 AM Jan 18, 2025 IST | Murugesan M
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் தொடர் கடல் அரிப்பை தடுக்காத அரசை கண்டித்து இந்து முன்னணியினர் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
Advertisement
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் கோயில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், தூண்டுகை விநாயகர் கோயில் முன்பு இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் கடல் அரிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமென கற்பூரம் ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement