For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

கடல் உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு - ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி!

09:22 AM Jan 23, 2025 IST | Sivasubramanian P
கடல் உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு   ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி

கடல் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்டு புதுச்சேரியில்  காதல் ஜோடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஜான் பிரிட்டோ மற்றும் தீபிகா. இவர்கள் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டது. அதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தீபிகாவை சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு அழைத்து சென்ற ஜான் பிரிட்டோ, பாரா கிளைடரில் பறந்து வந்து `Will u marry me?’ என்ற வாசகங்களுடன் லவ் ப்ரொபோசல் செய்தார்.

Advertisement

அதை தீபிகா ஏற்றுக் கொண்ட நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. இருவருமே ஆழ்கடல் பயிற்சியாளர்கள் என்பதால் கடலுக்கு, அடியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஜான் பிரிட்டோவிடம் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார் தீபிகா.

அதற்கு ஜான் பிரிட்டோ சம்மதிக்க, ஆழ்கடல் பயிற்சியாளர்களின் துணையுடன், இருவருக்கும் கடலுக்கு அடியில் திருமணம் நடைபெற்றது. புதுச்சேரியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கடல் பகுதியை தேர்வு செய்து, கடலுக்கு அடியில் 50 அடி ஆழத்தில் இந்த ஜோடி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement