கடையில் பொருட்கள் வாங்கி பணம் தர மறுத்த காவல் உதவி ஆய்வாளர்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடையில் பொருட்களை வாங்கி பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காவல் உதவி ஆய்வாளர் மீது பெண் ஒருவர் புகாரளித்தார்.
சண்முக சிகாமணி நகரை சேர்ந்த ஜெகதீஷ் - முத்துச்செல்வி தம்பதியர், பசுவந்தனை சாலையில் கடை நடத்தி வருகின்றனர். இவர்களது கடைக்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி திலிபன், சில பொருட்களை வாங்கிவிட்டு உரிய பணம் தர மறுத்துள்ளார்.
பின்னர் அதிக விலைக்கு சிகரெட் விற்பனை செய்வதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் வழக்கு தொடர்வேன் என மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதனை அவ்வழியாக சென்ற ஒருவர் வீடியோவாக பதிவுசெய்த நிலையில், அந்நபரின் செல்போனை பிடுங்கிய அந்தோணி திலிபன், அவரிடமும் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முத்துச்செல்வி காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.