கடை வீதிகளில் மக்கள் கூட்டம்!
10:47 AM Nov 01, 2024 IST | Murugesan M
தீபாவளி பண்டிகை நிறைவடைந்த நிலையில், ஈரோட்டில் தள்ளுபடி விலைக்கு துணிகள் விற்கப்படுவதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
Advertisement
ஆர்.கே.வி சாலையில் அமைந்துள்ள துணிக் கடைகளில் ஆண்டு தோறும் தீபாவளிக்கு மறுநாள் குறைந்த விலையில் துணிகளை விற்பனை செய்வது வழக்கம். அதே போல இந்தாண்டு தீபாவளிக்கான விற்பனை முடிவடைந்த நிலையில் துணிகளை கடைவீதியில் வைத்து வியாபாரிகள் குறைந்த விலைக்கு விற்றனர். அதில் குழந்தைகளுக்கான துணி 50 ரூபாய் எனவும் பெரியவர்களுக்கான துணி 200 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
Advertisement
Advertisement