கட்சி மாறி வந்தவருக்கு சீட் கொடுத்த திமுக : யார் இந்த வி.சி.சந்திரகுமார்? - முழு விவரம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமாரின் அரசியல் பயணத்தை தற்போது காணலாம்.
1987ஆம் ஆண்டு திமுக வார்டு பிரதிநிதியாக அரசியல் பயணத்தை தொடங்கிய வி.சி.சந்திரகுமார், விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவரானார்.
இதனை தொடர்ந்து தேமுதிக கொள்கை பரப்பு செயலாளராக பொறுப்பு வகித்த சந்திரகுமார், 2011ல் பிரிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் தேமுதிக சட்டமன்ற உறுப்பினரானார்.
2016 சட்டப்பேரவை தேர்தலில், அதிமுகவிடம் தோல்வியை தழுவிய சந்திரகுமார்,
2016 முதல் திமுக கொள்கை பரப்பு மாநில இணை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பகுதி பொறுப்பாளராக இருந்த சந்திரகுமார், )
2019 நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதி பொறுப்பாளரானார்.
2021 சட்டமன்ற தேர்தலில் குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளராகவும்,
2023 நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் சந்திரகுமார் செயல்பட்டார்.
2026 சட்டமன்ற தேர்தலில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக பணியாற்றிய சந்திரகுமார், அரவக்குறிச்சி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் முழு நேர தேர்தல் பணியாற்றி உள்ளார்.
தமிழகம் முழுவதும் திமுகவின் அனைத்து பொதுக்கூட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்களை தலைமை தாங்கி நடத்திய வி.சி.சந்திரகுமார்,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக களம் காண்கிறார்.