கட்டண உயர்வு கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் வழக்கு - 4 மாதங்களில் முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
06:30 PM Jan 24, 2025 IST | Sivasubramanian P
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த கோரி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
Advertisement
இதனை விசாரித்த நீதிமன்றம், பேருந்து கட்டண உயர்வு குறித்து அரசு போக்குவரத்து கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், பொதுமக்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க அறிவுறுத்தியது.
மேலும், பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க போக்குவரத்து துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement
Advertisement