கட்டி முடிக்கப்பட்ட 3 மாதங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்! : அண்ணாமலை கண்டனம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 மாதங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேம்பாலத்தை கட்டிய நிறுவனத்திற்கு திமுக அரசு மேலும் பல ஒப்பந்தங்களை வழங்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூர் கிராமத்தை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இதனை 3 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
இந்நிலையில் இந்த பாலம் அண்மையில் பெய்த மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தரமற்ற முறையில் பாலம் கட்டப்பட்டதால்தான் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, 18 கோடி ரூபாய் மதிப்பிலான பாலத்தின் ஆயுட்காலம் வெறும் 90 நாட்கள்தான் என விமர்சித்துள்ளார். இந்த மோசமான பாலத்தை கட்டிய நிறுவனத்திற்கு திமுக அரசு தொடர்ந்து பல ஒப்பந்தங்களை வழங்கும் என்பதில் சந்தேகமிலை எனவும் தெரிவித்துள்ளார்.