கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிய கார் : உயிர் தப்பிய இருவர்!
03:17 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
திருப்பத்தூர் அருகே தேசிய சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. எனினும் காரில் பயணம் செய்த இருவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
Advertisement
நாட்றாம்பள்ளி அடுத்துள்ள வெலக்கல்நத்தம் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள வேப்ப மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
காரில் சிக்கி காயமடைந்த இருவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement