செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கனடாவில் இந்துக்கள் தாக்கப்பட்ட விவகாரம் - காலிஸ்தான் இயக்க ஒருங்கிணைப்பாளர் கைது!

11:05 AM Nov 11, 2024 IST | Murugesan M

கனடாவில் கோயிலில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், காலிஸ்தான் இயக்க ஒருங்கிணைப்பாளரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.

Advertisement

கனடாவில் உள்ள பிராம்டன் நகரில் இந்து மகாசபை கோயில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மீதும், கோயில் மீதும் சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்திற்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களின் இந்த தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்த பீல் பகுதி போலீஸார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான சீக் ஃபார் ஜஸ்டீஸ் என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதும், இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இந்தர்ஜித் கோசல் என்பவர் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்பதும்  தெரியவந்துள்ளது.

Advertisement
Tags :
attack on hindus in candaCanadaFEATUREDKhalistan movement coordinator arrestMAIN
Advertisement
Next Article