செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

10:12 AM Dec 16, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

கனமழை காரணமாக நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள பல்வேறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Advertisement

நெல்லை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

அதன்படி மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் மூன்று நாட்களில் 18 அடி உயர்ந்து 98.29 அடியை எட்டியுள்ளது. பாபநாசம் காரையார் அணையின் நீர்மட்டம் 31 அடி உயர்ந்து, 100.55 அடியை எட்டியுள்ளது.

Advertisement

சேர்வலாறு அணை நீர்மட்டம் பல மடங்கு உயர்ந்து 135 அடியை எட்டியுள்ளது. கனமழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
Tags :
Due to heavy rainheavy rainMAINthe water flow to the dams increases!
Advertisement