கனமழை எதிரொலி - பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக தமிழகத்தில் 20 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
தென்கிழக்கு வங்க கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுத்துள்ளதால், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால், சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதேபோல், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும், அரியலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், கரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கனமழை காரணமாக வேலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் பெய்து வரும் தொடர் கனமழையால், இன்று நடைபெற இருந்த திருவள்ளூர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.