கனமழை எதிரொலி - புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் இ.சி.ஆர் சாலை, காந்தி வீதி, புஸ்சி வீதி, ஆகிய பிரதான சாலைகளிலும் , ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், உள்ளிட்ட தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
மேலும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்திற்கு ஆளாகினார். பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு அதி கனமழை பெயதுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48.4 cm மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1995இல் இதே போல மழை பெய்துள்ளது.
இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் நாளை திங்கட்கிழமை அறிவித்து புதுசேரி அரசு உத்தரவிட்டுள்ளது.