செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கனிமவளங்களை சட்டவிரோதமாக எடுத்த வழக்கு : 6 நிறுவனங்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 21 நபர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

01:34 PM Apr 07, 2025 IST | Murugesan M

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனிம வளங்களைச் சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பாக 6 நிறுவனங்கள் மற்றும் 21 நபர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Advertisement

கனிமவளங்களை சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அரசுக்குச் சுமார் 5 ஆயிரத்து 832 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில், 6 நிறுவனங்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 21 நபர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Advertisement

தாது மணல் முறைகேடு விவகாரத்தில் மொத்தம் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
Illegal mining case: CBI files case against 6 companies and 21 accused persons!MAINசிபிஐ வழக்குப்பதிவு
Advertisement
Next Article