செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கன்னியாகுமரியில் கனமழை - தாமிரபரணி தரைப்பாலத்தில் 2-வது நாளாக போக்குவரத்துக்கு தடை!

03:45 PM Oct 26, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

கன்னியாகுமரியில் கனமழையின் காரணமாக குழித்துறையில் உள்ள தாமிரபரணி ஆற்றின் தரை பாலத்தில் 2-வது நாளாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

கன்னியாகுமரியில் கடந்த 3 தினங்களாக இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. மேலும், பரழியாறு, கோதையாறு, தாமிரபரணி ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழித்துறை தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளதால், 2-வது நாளாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி பாலத்தின் இரு பகுதிகளிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Kanyakumari rainMAINtamiraparani riverTamiraparani river bridge
Advertisement