செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கன்னியாகுமரி அருகே 120 ஆண்டு கோயிலை இடிக்கப் போவதாக அறிவிப்பு - இந்து அமைப்புகள் எதிர்ப்பு !

08:30 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

கன்னியாகுமரி அருகே 120 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலை இடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நீதிமன்றம் அருகே சாலையின் ஓரத்தில் 120 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தினசரி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மேலும், முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடும் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், இக்கோயிலை இடிக்கப்போவதாக குழித்துறை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு, பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், கோயிலில் சிறப்பு யாகமும் நடத்தினர். இதனால், அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINkanyakumariSri Dharma Shasta TempleKuzhithurai CourtKuzhithurai Municipal Administration
Advertisement