கன்னியாகுமரி : காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!
04:55 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
கன்னியாகுமரி அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
நல்லூர் பேருராட்சிக்கு உட்பட முளங்குழி கிராமத்தில் வசிக்கும் புஷ்பராஜ் என்பவர் தனது விவசாய நிலத்தை செல்போன் டவர் அமைப்பதற்காக வாடகைக்கு கொடுத்து உள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனி பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் புகார் அளித்த இருவரிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் மார்தாண்டம் காவல் நிலையத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
Advertisement
இதனை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement