கன்னியாகுமரி : பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!
கன்னியாகுமரி மாவட்டம் மணலிகரையில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Advertisement
மணலிகரை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றுவந்த 12-ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பைசல் கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளி தப்ப வைக்கப்பட்டுள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி லீமாரோஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவியை வாகனத்தில் ஏற்றிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.