கன்னியாகுமரி : பொதுப்பாதையை அடைத்ததால் தவிக்கும் குடும்பம்!
12:20 PM Apr 10, 2025 IST
|
Murugesan M
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பாதையைத் தனி நபர் ஒருவர் இரவோடு இரவாக கேட் போட்டு அடைத்ததால் மூதாட்டியும் அவரது குடும்பத்தினரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
Advertisement
குந்நுவிளை பகுதியில் மூதாட்டி சந்திரிகா தேவி என்பவர், தனது மகன், மருமகள் மற்றும் பேத்தியுடன் வசித்து வருகிறார்.
இவர் தனது வீட்டிற்குச் செல்ல பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை அருகில் வசிக்கும் உதய குமார் என்பவர் இரவோடு இரவாக கேட் போட்டு ஆக்கிரமித்துள்ளார்.
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் களியக்காவிளை காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement