கரூரில் டாஸ்மாக் கடை முன்பு முதலமைச்சரின் படத்தை ஒட்டிய பாஜகவினர் கைது!
05:20 PM Mar 20, 2025 IST
|
Murugesan M
கரூரில் டாஸ்மாக் கடை முன்பு முதலமைச்சரின் படத்தை ஒட்டிய பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
கரூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பாஜக மேற்கு மாவட்ட தலைவர் பவானி துரைபாண்டியன் தலைமையில் அங்கு சென்ற பாஜகவினர், டாஸ்மாக் கடை சுவற்றில் முதலமைச்சரின் படத்தை ஒட்டினர்.
இதை அங்கிருந்த டாஸ்மாக் ஊழியர்கள் அடுத்த நொடியே கிழித்தனர். தொடர்ந்து அங்கு விரைந்த காவல் துறையினர், பாஜகவினரை கைது செய்தனர்.
Advertisement
Advertisement